Sunday, January 5, 2014

ஈர்ப்பு

வானமெனும் கோட்டையில் நிலவாக நீயிருந்தாய்
என் இதயமெனும் கோட்டையில் முழுவதுமாக தானிருந்தாய்
கண்ணை மூடும்போதெல்லாம் கனவாக நீ வந்தாய்
உந்தன் அழகால் அந்தன் மனதை திருடிச் சென்றாய்...
                                                                                                         - கிறுக்கன்-

Saturday, December 28, 2013

நீ


அழகின் அலகு நீ
அறிவின் அரி நீ
கடலின் நிறம் நீ
வானின் வண்ணம் நீ
மண்ணின் மணம் நீ
உயிரின் மூச்சு நீ
ஆண்மாவின் சுவாசம் நீ
பெண்ணின் பெருமை நீ
தேவதையின் வடிவம் நீ
என்னை எண்ணும் நீ
நான் இனியில்லை இல்லாமல் நீ.

                                                                 -கிறுக்கன்-

Friday, December 20, 2013

கொடுமையிலும் கொடுமை..

பிறவியில் கொடுமை மானுடம்
மானுடத்தில் கொடுமை அகவை
அகவையில் கொடுமை இளமை
இளமையில் கொடுமை தனிமை
தனிமையில் கொடுமை வறுமை
வறுமையில் கொடுமை மடமை
மடமையில் கொடுமை பேதமை
                                     
                                                           -கிறுக்கன்-

Monday, December 16, 2013

உயிர் வழி கடைபிடித்தல்

ன்பை மதி
னவத்தை மிதி
யல்பாய் இரு
கையாலனாய் மாறு
ண்மையை நாடு
மைதனத்தை விடு
ளிமையைத் தழுவு
மாற்றத்திலிருந்து வழுவு
ம்புலத்தை அடக்கு
ருமையைப் பேனு
ருணர்வைக் கானு
ஓளவை தமிழ் கெளு
ரினை தளரு

                                             -கிறுக்கன்-

Saturday, December 14, 2013

கிறுக்கனின் வணக்கம் ...


எல்லாருக்கும் வணக்கம்....

என்னை பற்றி சில வரிகள்

நான் ஒரு கிறுக்கன், கண்டதையும் கிறுக்கும் ஒரு கிறுக்கன்... என்னோட மனசில படுர சிலபல விசயங்கள காகிதத்ல கிறுக்கி பத்திரமா வைக்க வேண்டுன்னு நினைப்பேன் ஆனால் எழுதிய காகிதத்தை மறந்துடுவேன் அல்ல்து எழுதவே மறந்துடுவேன்... நான் கிறுக்குவதை பத்திரிப்படுத்தவும் நீங்கள் தெரிந்து கொள்ளவும் இந்த google வலைதளத்தில் கிறுக்கப்போறேன். அதற்காக தான் இந்த வலைதளத்திற்க்கு “வலைதளக்கிறுக்கன்” என்று பெயர் வைத்துள்ளேன்.

அதனால் இனிமேல் இந்த கிறுக்கனின் கிறுக்களை நீங்கள் சகித்துதான் ஆகவேண்டும்....


முதல் கிறுக்கல் கடவுளை பற்றி...

                
                    கடவுள்




பிரபஞ்சத்தின் தொடக்கம் என நம்பப்படுவது
உலகத்தின் உந்துவிசையாக  இயங்கி  கொண்டிருப்பது
ஜகத்தின் அகமாய் அகத்தினுள்  அகமாய்
பயிரினில் விதையாய் 
விதயினில் மரமாய்
மரத்தினுள் மீண்டும் பயிராய்
முதலில் முடிவாய்
முடிவில் முதலாய்
இப்படியாக ஆதியும் அந்தமுமாக இருப்பது
இதுவரை யாரும் பாராதது ஆனால்  
சிலர்  உணர்ந்ததாக  நம்பப்பட்ட
நம்பகத்தின் நம்பிக்கை தான் கடவுள்.....

                                                                                 -கிறுக்கன்-